நிலாவட்டம்

தனக்குள் நிலவு அடங்கியதால்
தனக்கு மட்டும் சொந்தம் என்ற
பொய்மை பந்தம்
நிலவு செல்லும் பாதையெல்லாம்
தொடர்ந்து செல்லும் ஓர் பயணம்.....

இராமனை தொடர்ந்த இலக்குவனோ!
யாரறிவார் அவ்வட்டதின் மேன்மையினை
நிலவதுதான் கண்விழித்தால் அதனருகில்
கண்ணயர்ந்தால் கண் மறையும்

உறவு சொல்ல வழியில்லை
உரிமை கொள்ள நிலவில் இடமுமில்லை
நிலவே விலக்கி வைத்ததனால்
நெடுந்தொலைவில் அவ்வட்டம்

வட்டத்தை கடந்து நிலவின்
ஒளிவெள்ளம் விண்மீன்
வாசல்வரை செல்கிறதே

ஓ! தன் ஒளியால் பிறந்த
பொய்மை வட்டமென
உறவு சொல்ல மாறுகிறதோ !
நிலவதுதான் வெறுத்தாலும்,
நெடுந்தொலைவில் நின்றே - அவ்வட்டம்
நெடுந்துயில் கொள்ளும் காலம்வரை
நித்தம் நித்தம் காதலிக்கும்.......

எழுதியவர் : அன்பரசு (11-Sep-15, 4:56 pm)
சேர்த்தது : அன்பரசு
பார்வை : 97

மேலே