மாலை நேர மழையின் போது மனதில் தோன்றிய வரிகள்

திசை தொலைத்தது காற்று;
இந்த காற்றின் கண்ணில்
காரப் பொடியைத் தூவியது யார்?

பேய் பிடித்தாடுகின்றன மரங்கள்
இந்த மரங்களை ஏவிவிட்ட மந்திரவாதி யார்?
வானம் கர்ஜிக்கிறது;
பூமியைப் புரட்டியெடுக்க புறப்பட்டது புயல்.

வானத்துக் காதலியை கவிதை
சொன்னார்களாம்
பூமியின் புதல்வர்கள்.
காட்டிக் கொடுத்தது கள்ள நிலா;
வானம் அனுப்பி வைத்த
அடி ஆட்கள் தான் இவைகள்.

மண்ணின் அழிவு
பெண்ணின் கையில்.

எழுதியவர் : (11-Sep-15, 5:19 pm)
சேர்த்தது : Senthil Murugan2
பார்வை : 140

மேலே