பூவே ஏன் பிறந்தாய்

எனது அம்மா எழுதிய வரிகள் உங்கள் அனைவரின் கனிவானப் பார்வைக்கு வைக்கிறேன். அவர்கள் தனது உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுதிக் கொடுத்தார்கள். அதன் தட்டச்சு வடிவம் மட்டுமே என்னுடையது. என் அம்மாவின் கவிதை உங்களுக்காக........

பூவே ஏன் பிறந்தாய்.... ????

பூவே ஏன் பிறந்தாய் இப்புவியில் ...??
மாலையில் மொட்டாகி
இரவில் ஊடலாகி
காலையில் மலர்கிறாய் ...

பலவித வண்ணத்தில்
அழகாய் மிளிர்கிறாய் .
நறுமணமாய் திகழ்கிறாய் ...

பூவே ... உன்னை சிலர்
ரசிக்கிறார்கள் ; சிலர் சூடுகிறார்கள் .
இறைவனுக்கும் சூடி மகிழ்கிறார்கள் .
இறுதி ஊர்வத்திலும்
இடம் பெறுகிறாய் ....

ஆனால் ...... தெய்வத்திற்கு
சூடிய பூவோ வாடினாலும்
காலில் மிதிபடுவதில்லை .
நறுமணத்தை நிறைக்கிறது எங்கும் .

ஆனால் ..... மக்கள் சூடிய பூவோ
மதிபட்டு அழிகிறது ...
இறுதி சடங்கில் இடம் பெற்ற
பூவோ தரையில் வீழ்த்து
காலில் மிதிப் பட்டு அழிந்து போகிறது .

ஏன் ....??? உன் பிறப்பின்
இரகசியம் இது தானா ...????
உனக்குள் ஏன் இந்த
முரண்பாடு ......????
மனித மனங்களைப்போல் .....

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Sep-15, 10:45 pm)
பார்வை : 106

மேலே