ஆகட்டும்
ஆலயம் கண்டால் பக்தி
ஆட்சியைக் கண்டால் பதவி
ஆளுமை கண்டால் பொறாமை
ஆறுதல் கண்டால் அன்பு
ஆணவம் கண்டால் அடங்காமை
ஆராரோ கண்டால் அரவணைப்பு
ஆயுதம் கண்டால் களமது
ஆதாயம் கண்டால் மகிழ்ச்சி
ஆக்ரோசம் கண்டால் போட்டி
ஆச்சரியம் கண்டால் விழிப்பு
ஆத்திரம் கண்டால் அடிதடி
ஆதாரம் கண்டால் நியாயம்
ஆசீரைக் கண்டால் பணிவு
ஆண்டவனைக் கண்டால் அழுகை
ஆதாரம் அவனென்று தொழுகை
ஆகட்டும் அவன் சித்தம் நம் கையில்