என் முதல் பெண் தோழியே

என் முதல் பெண் தோழியே
நம் நட்பை காதல் என்று நினைத்தோர்க்கு
வாழ்ந்து காட்டினோம் நண்பர்களாக!!

நான் கலங்கிய போதெல்லாம்
முதலில் கண்கலங்கியவளே!!

என் அன்னை போல் அன்பு காட்டியவளே!!

என் திருமணத்திற்கு பின் மட்டும் ஏன்
நம் நட்பு நடிப்பாகிவிட்டது???
என் மனைவிக்கு முன்னாள்

ஓ பெண்ணின் மனம் ஒரு பெண்ணுக்கு தான்
புரியும் என்பதாலோ- புரிந்துகொண்டேன்
மறுகணமே சொல்லிவிட்டேன் மனைவியிடம் நம் நட்பை
புரிந்து கொள்வாழ் அவளும்

ஆனால் நாம் வாழ்ந்து காட்டிய திருமணத்துக்கு முன்
நம் நட்பு பந்தத்தை இனி வாழ்ந்திட இயலாத
இந்நிலைக்கு கலங்குகிறேன்!!

மறு ஜென்மம் என்றால் நாம் இருவரும்
ஒரு பாலினமாக பிறந்திட வேண்டுமடி
நண்பர்களாய் மிண்டும் வாழ்த்திடவே...

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (12-Sep-15, 1:10 am)
பார்வை : 189

மேலே