நீங்காத அழுக்கு

உள்ளொன்று வைத்து உதடொன்று பேசிடுங்
கள்ளத் தனந்தன்னைக் கையாண்டு - கொள்பவர்
தெள்ளத் தெளிவாய் தெரிகின்ற உண்மைக்கு
முள்ளாடைத் தைப்பர் முயன்று.
முகத்துக்கு நேரே முறுவலிப்புச் செய்து
முகம்மறையத் தூற்றும் மனிதர் - அகத்தழுக்கை
ஆற்றி லடித்தே துவைத்தாலும் நீங்காமல்
சேற்றெருமை யாகும் சிதைந்து.
*மெய்யன் நடராஜ்