வாழ்க Valamudan

வாழ்க வளமுடன் நீங்கள்
வாழ்ந்து கட்டுவோம் நாங்கள்
வளம் பெற உழைத்திடுவோம்
வளமான பாரதத்தை உருவாக்கிடுவோம்...!

வாழ்க வளமுடன் நீங்கள்
வாலிப வயதை கடந்தபின்னும்
மண்ணிற்கும் உயிரிற்ருகும்
மக்களுக்கும் உயிரிருக்கும்...!
கண்னைபோல் கத்திடுவீர்
மண்ணின் வளத்தை காத்திடுவீர்..!

கல்வி பெருங்கடலை
கடகத்தான் முற்படுவீர்
காலம் கடந்துவிடும்
காமம் அழிந்துவிடும்
வாழ்க வளமுடன் நீங்கள்
வாழ்ந்து கட்டுவோம் நாங்கள்..!

உண்மையை உரைக்க தயங்கதீர்
பொய்யை உறைக்கவே உரைக்கதீர்
எண்ணுவதை எழுத தயங்கதீர்
ஏற்றம் பலபெற்று வாழ்ந்திடுவீர்
வாழ்க வளமுடன் நீங்கள்
வாழ்ந்து கட்டுவோம் நாங்கள்..!

சாதிமத அரக்கனை அழித்திடுவோம்
சாதனைகள் பலப்பல புரிந்திடுவோம்
எளிமை என்றும் துணைநிற்கும்
வலிமை என்றும் உதவிசெய்யும்
வாழ்க வளமுடன் நீங்கள்
வாழ்ந்து கட்டுவோம் நாங்கள்...!

நட்பை நேசித்தோம் அன்று
நாளை நமதென்போம் இன்று
கனிவாய் பேசிடுவோம் என்று
உண்மையாய் செயல்பட்டால் நன்று
வாழ்க வளமுடன் நீங்கள்
வாழ்ந்து கட்டுவோம் நாங்கள்..!










k

எழுதியவர் : ரவி Shrinivasan (12-Sep-15, 10:20 am)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 57

மேலே