தூவினேன் பொய் மலர்களை

பொய்யுடன் நான்வருவேன் அவளும் அங்கே ------------------1 
புன்னகை யுடன்வருவாள் அழகிய அந்திப் 
பொழுதும் வந்திடும் அங்கே 
வாழ்த்துவேன் அவளை பொய்மலர் தூவியே 


பொய்யுடன் நான்வர அங்கே அவளும்தான் -------------------2 
புன்னகை பூத்துவர பொன்னந்திப் மாலைப் 
பொழுதும் வருமங்கே வாழ்த்துவேன் என்னவளை 
பொய்மலர் தூவியே நான் 

-----கவின் சாரலன் 
முதல் பா வடிவம் நேரிசை ஆசிரியப்பா 
இரண்டாவது இன்னிசை வெண்பா வடிவம் 
முதல் பாவில் ஈற்றயல் அடி முச்சீரலானது ---நேரிசை ஆசிரியப்பா விதி 
இரண்டாவதில் ஈற்றடி முச்சீராலனது ----வெண்பா விதி 
ஈற்றுச்சீர் ஏகாரம் ---தூவியே --ஆசிரியப்பா ஓசைத் தேவை 
ஈற்றுச் சீர் ---நான் ---நேர் --ஓரசைச் சீர் ----வெண்பா முக்கிய விதி 
ஆர்வலருக்காக ......படிக்க முயல

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-15, 4:04 pm)
பார்வை : 71

மேலே