சாமி
இந்த பூமியிலே
என்
சாமி.....நீதானே.....
உயிருள்ளவரை
உன்னருள் கிடைக்க
வரம்
தருவாயா......?
உந்தன்
மாலைக்கு
தானே.....காலை
மாலை
ஏங்குகிறேன்
நானே......!
தூங்காமல்
கோபம் கொண்டது
இமைகள்.....
கவலைகள்
உணர்ந்து
கன்னங்கள்
நீர்க் கோலமிடுது......!
பிரித்தாலும்
பிரியாது
பிரியம்
கூடும்....பித்தலாட்டமே
காதல்.....!
கடதாசியில்
காதல்
சொல்லும்
வரிகளில்.....
எழுத்துக்கள் இருக்கும்
ஆனால்
சரியும் தவறும்
உள்ளத்தில்
அனலாய்
கொதிக்கும்......
விதிதான்
சதி
செய்தது
என்று.....வீதியிலே
திரியும்
யாருக்கும்
புரிவதில்லை
முயற்சியில்
பாதிகூட
செய்யவில்லை
என்று......
ஆண்டவனிடத்தில்
பக்தியை
காட்டாமல்
கத்தி பொல்லு
என்று.....உடம்பைக்
கிழித்து......
உலகை அறுக்குது......!?
சோகத்தில்
தள்ளாடும்
காலிப் போத்தல்கள்
இங்கே.....
கண்ணில் பட்ட
இடமெல்லாம்.......!