பெண்ணே மாறி விடு நீ

பத்து மாதம் பத்திரமாய்
கருவறையில் என்னை வைத்து..

பாதுகாத்து பெத்தெடுத்து
பாசத்தோடு என்னை வளர்த்து..

பாரியாள் என்பவளோடு
என்னை ஒப்படைத்து...

மகனே வாழ்ந்து கொள் என்று
மனைவியோடு சேர்த்து வைத்து..

நீண்ட காலம் வாழ்ந்து கொள்
என்று மனசார ஆசிர்வதித்து..

என் அம்மாவை வீட்டை விட்டு
வெளி வேற சொல்கிறாள் என்னவள்..

இவளும் நாளை ஒரு தாயாகி
வருவாள் என்பதை மறந்து விட்டு ..

பெண்ணுக்கு பெண்தான் எதிரியா?
பெண்ணே உன் எண்ணத்தை..

மாற்றி கொள்ள மாட்டாயா?
பெண்ணை குலவிளக்கோடு ஒப்பிடும் நாம்..

அணையா விளக்காய் இருத்தால்
குடுபத்திற்க்கே வெளிச்சம் தானே.

பெண்ணே நீ எப்போது மாறுவாய்
உன்னை போல் அம்மாக்கள்..

மகிழ்ச்சியாய் வாழ
சிக்கிரம் மாற்றி விடு நீ...

நீ மட்டும் இல்லை உன்னை போல
இன்றைய அம்மாக்கள்..

எழுதியவர் : மன்சூர் அலி, ஆவடி ,சென்னை. (13-Sep-15, 11:00 am)
பார்வை : 74

மேலே