வேண்டாம் இந்த உறவு

முதல் முறையாய் என்
முதல் இரவு முற்றுக்கை..

முதல் கணவனுடன்
முதல் அரக்கேற்றம்..

முகத்தோடு முகம் சேர்த்து
முத்தங்கள் பரிமாற்றம்..

முதல் சந்திப்பிலே
முத்தான இன்பங்கள்..

முடிவு வரை இப்படிதான் என
முனு முனுதேன் என்னவருடன்..

முதல் பத்து நாட்கள்
முடியாமல் தவித்தேன்..

தாபத்யம் தரமாய் இருந்தது
தன்னையே மறந்து மகிழ்வாய் இருந்தேன்.

தேனாய் இனித்தது..சுகம்
தென்றலாய் வீசியது..

என் காமம் கணக்கில்லாமல் போனது
படுக்கை அறையும் என்னை பாடாய் படுத்தியது..

மன்மத லீலையை முடிந்தவரை
வென்றே விட்டார்.என்னவர்..

இப்படியாய் நடந்து அறுபது நாட்கள்
இருக்கும் அவர் என்னை விட்டு சென்று விட்டார்..

ஆண்டவன் அவரை அழைத்து கொண்டானாம்
அவருக்கு எயட்சாம் மருத்துவம் சொன்னது..

மணக்கும் முன் தவறான உறவு வைத்ததால்
மண்ணறைக்கு சென்று விட்டார்..

விதைத்து விட்டார் எனக்கும்
எய்ட்ஸ் நோயாளியாய் நான்.

விதவை கோலத்திலே விதியை
நினைத்து வருந்துகிறேன் நான் இன்று..

தயவு செய்து சொல்கிறேன்
மணக்கும் முன் வேண்டாம்

தவறான உறவு..தகுதியாய் வாழ
தவறு ஏதும் செய்யாதீர்...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (13-Sep-15, 12:25 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : ventaam intha uravu
பார்வை : 139

மேலே