ஹைக்கூ

சோர்வு பசி களைப்பு,
எல்லாமுமே ஒருசேரஅடித்து,
வாடி வதங்கவும் வைத்தது,
கையிலிருந்து காத்திருப்பில்,
உனக்காக என்னோடு காய்ந்துபோன,
ஒற்றை ரோஜாவை..........
-------------------------------------------------------------
மெழுகுவர்த்தி வெளிச்சம்,
போதுமானதாய் இருக்கவில்லை,
பொங்கி பிரவாகமெடுத்த,
ஆற்றலும் அதீதமும் நிறைந்த,
உண்மை உணர்சிகளுக்கு,
உண்மையில் கண்ணீர் விட்டான்,
ஏழைச்சிறுவன்............
---------------------------------------------------------------
வட்டமடித்த பட்டாம்பூசிகள்,
வண்ணவண்ணமாய் எல்லா நிறங்களிலும்,
கண்கொள்ளாக்காட்சிதான் ரசித்து நிற்க,
அதேசமயம் அது நிகழ்ந்தது ஒரு பெரும்,
குப்பைமேட்டில்.............
-------------------------------------------------------------------
நட்சத்திரங்களை என்னிக்கொண்டிருந்தவன்,
இடையிடையே சிறைப்பட்டான்,
சில நினைவின் விளிம்புகளில்,
தன்னை மறந்தாலும்,
தன்னிலை மறக்கக்கூடாதே அவன்,
இரவுக்காவலன்........................
---------------------------------------------------------------------
எதிர்பார்ப்புகள் எனும் ஏணியில் ஏறி,
கால்கடுக்க எட்டிப்பார்த்து,
கிட்டக்கிட்ட வருவாளா என,
பரிதவிப்புடன் உயரம் பார்த்து,
பரிதாபப்படவைத்தது,
பாலுக்கு ஏங்கி துவண்ட,
பச்சைமழலை......................
------------------------------------------------------------------------

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (13-Sep-15, 10:42 pm)
பார்வை : 61

மேலே