பெரும்பான்மை

சிறுவயது முதல் சொல்லி கொடுத்தனர் ,
பெரும்பான்மையின் முடிவுகளே செயலாக்கமாம் !
அதுவே பொது நலனாம் !

வளர வளர எழுந்தன வினாக்கள் ,
பெரும்பான்மையின் அடிப்படை வாதம் பற்றியும் !

கருத்து வேற்றுமை ஒன்று முளைக்க ,
பெரும்பான்மையின் முடிவே செயலாக்கப்பட ,
இப்பெரும்பான்மை உண்மையில் அதன் அங்கம் ஒவ்வொருவரின் சிந்தனையா ?
இல்லை! மந்தைகளை தன் பக்கம் சாய்த்துவிட்ட ஒரு சிலரின் வெற்றி முழக்கமா ?

மனிதர்களில் பலவகை ,
‘தனக்கென்ன ’ –என்று முடிவுகளில் விருப்பமில்லாமல் சிலர் ,
விளைவுகள் தெரிந்து ஆதிக்கத்தின் பக்கம் சாயும் வேறு சிலர் ,
எதிர்க்க மனமிருந்தும் சூழ்நிலை கைதிகளாய் வெகு சிலர் ,
துணிந்து நிற்போர் கடைசியில் சிறுபான்மையே !

மாற்றங்களை விரும்பா மனித மனம் .
முற்றிலும் புதியதாய் கருத்தை ஒருவன் முன்வைக்க ,
மாறாமல் எதிர்த்து நிற்கும் பெரும்பான்மை ,
காலம் கடந்தபின் உண்மை உணரும் பெரும்பான்மை !

அறிவாளிகள் அறிவிலிகள் கணக்கொன்றும் எடுத்தால் ,
விதிவிலக்காய் பெரும்பான்மையோர் கருத்து -
“அறிவிலிகளே அன்றி அறிவாளிகள் பெரும்பான்மை இல்லை என்றும் ”!

சிந்தித்து பார்த்தால் ....
ஆதிக்கத்தின் பக்கமோ பெரும்பான்மை ?
முதுகெலும்பு இல்லாதோரின் குறை போக்க ,
முளைத்துவிட்ட மாய எலும்போ? பெரும்பான்மை !

எழுதியவர் : மகா ! (13-Sep-15, 9:35 pm)
சேர்த்தது : mahakrish
Tanglish : perumbanmai
பார்வை : 72

மேலே