முதியோர் இல்லத்திலிருந்து

மகனே!

குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!

முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!

அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!

மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!

சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!

பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!

தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!

கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!

படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!

இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!

எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்

எல்லாம் வாங்கியும் உன்னிடம் இல்லாமல்
இருந்தது இதயம்..!

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 10:34 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 41

மேலே