பொறுமை கொள்

பொறுமை கொள் !
காலம் மாறும்
களம் மாறும்
விதி மாற்றும்
பொறுமை கொள் !
வீழ்ந்தவன் எழுவான்
எழுந்தவன் வீழ்வான்
அதுவரை நீ
பொறுமை கொள் !
பொறாமை கொள்ளாதே
வேடனாய் காத்திரு
வேடமிட்டு காத்திறாதே
பொறுமை கொள் !
உன் முன் ஆடினவன்
உன் ஆட்டம் காண்பான்
அதுவரை பொறுமை கொள் – மனமே
பொறுமை கொள் !!!!!!

எழுதியவர் : அழகேசன் (14-Sep-15, 10:56 am)
Tanglish : porumai kol
பார்வை : 402

மேலே