சென்னை விமான நிலையத்தைப் பார்க்க

(சந்திரமுகி படத்தில் வருவது போல் வடிவேலுவை ரஜினி இன்றைய சென்னை விமான நிலையத்தைப் பார்க்க கூட்டிப் போனால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. இது ஜூன் 2014ல் எழுதிய பதிவின் மீள்.)

வடிவேலு: மாப்ள…கேட்டைப் பாத்தாலே பயமா இருக்கே….
வடிவேலு: இதான் மாப்ள நீங்க கேட்ட சென்னை விமான நிலையம், பாத்தாச்சுல்ல, ஊரைப்பாத்து கிளம்புங்க….
(ரஜினி உள்ளே இழுத்து செல்கிறார்)
வடிவேலு: மாப்ள நான் உள்ளே வரமாட்டேன், உள்ளே வரமாட்டேன்… நான் அங்கேயே உள்ளே வரமாட்டேன்னு சொல்லித்தான் வந்தேன், அதையும் மீறி ஒரு பெரிய மனுஷனை கட்டயப்படுத்தறது அவ்வளவு நல்லாயில்லை.
ரஜினி: சொல்லி கூப்பிட்டு இருந்தா நீ வந்திருக்க மாட்டே சொல்லாம கூப்பிட்டதாலதான் நீ வந்தே…

வடிவேலு: நீயா…
ரஜினி: ஆமாயா…
வடிவேலு: யாவா…
ரஜினி: ஆமாடா…
வடிவேலு:டாவா…
ரஜினி: கழுதை வயசாகுது உள்ளே வரதுக்கு பயப்படறே, உனக்கெதுக்கு மரியாதை…

வடிவேலு: நீ கெட்ட வார்த்தைல திட்டினாலும் நான் வரமாட்டேன்…
ரஜினி: இது என்ன பில்டிங் ஏர்போர்ட்டுக்கு வெளில…
வடிவேலு: சொல்ல மாட்டேன்
ரஜினி: சொர்ணா…
வடிவேலு: செக்யுரிட்டி, போலீஸ் இருக்கற பில்டிங்…
ரஜினி: அவங்களே இருக்கும்போது நமக்கு என்ன பயம்…
வடிவேலு: அவங்க இதுக்குள்ள மட்டும்தானே இருக்காங்க… அதுக்குள்ளே போக மாட்டாங்களே…
ரஜினி: நாம போவோம்….
வடிவேலு: மாப்ள மாப்ள நீ வேணா போ மாப்ள.. நான் ஊருக்கு போயிடறேன் மாப்ள…

ரஜினி: ஹே… இங்கே என்ன ஒரே காரு பைக்கா நிக்குது…
வடிவேலு: இதெல்லாம் ஊருக்குப் போற கூட்டம்
ரஜினி: அப்போ உள்ளே ஆளுங்க இருக்காங்களா…
வடிவேலு: ஆமா ஏர்போர்ட் ஓபன் பண்ணி சில மாசமா எல்லாரும் போயி வந்துட்டுதான் இருக்காங்க…
ரஜினி: இத்தனை பேரு போயிட்டு வந்திட்டு இருக்காங்க நாம ரெண்டு பேரு உள்ளே போக என்ன பயம்
வடிவேலு: அவங்க எல்லாம் வெளிநாடு, உள்நாட்டு மேட்டர் தெரிஞ்சா கிழிஞ்சுறாது?
(உள்ளே போகிறார்கள்)
வடிவேலு: புதுசே இப்படிப் பாழடைஞ்சு கிடக்கே…

ரஜினி: முருகேசா…
வடிவேலு: என்ன…
ரஜினி: இந்த எர்போர்ட்டோட ஹிஸ்டரி தெரியுமா?
வடிவேலு: எஸ்டிடின்னா வரலாறுதானே.. இந்த ஏர்போர்ட்டு ரொம்ப பழசா இருக்குன்னு 2000 கோடி செலவு பண்ணி புதுசாக்கினாங்க… இதைத் தொறந்து வெச்சு ஆறு மாசம்தான் ஆகுது… வெளில பாத்தா புதுசாத்தான் தெரியுது தலைக்கு மேல சரியில்லையே மாப்ள…போயிடலாம் மாப்ள…
ரஜினி: சரி வா..
வடிவேலு: உள்ளே இல்ல வெளியே மாப்ளே… ஐயோ… மாடெல்லாம் மண்டை உடைஞ்சு கிடக்குது மாப்ள….

ரஜினி: அது மனுஷன் முருகேசா…
வடிவேலு: மனுஷனா…
ரஜினி: அப்படி உள்ளே என்னதான் பிரச்னை முருகேசா…
வடிவேலு: ஏதோ பொய்க்கூரை விழுதுங்கறாங்க…
ரஜினி: பைத்தியக்காரங்க…
வடிவேலு: லைட்டு விழுதுங்கறாங்க..
ரஜினி: பயந்தாங்கொல்லிங்க…
வடிவேலு: அது மட்டுமில்லாம, முப்பதடி சுவர்ல கிரானைட் கல்லு பேந்து அப்படியே தலைல விழுதுங்கறாங்க….

ரஜினி: என்னது கல்லா…

(வெளியேறி ஓடுகிறார். வடிவேலு கவனிக்காமல் பேசியபடி போகிறார்)
வடிவேலு: இந்த கோவாலு இருக்கான்ல கோவாலு, சொல்ல சொல்லக் கேக்காம ஒரு நாள் உள்ளே வந்து ஏதோ பிளைட் புடிக்க போயிருக்கான்… அன்னிக்குன்னு பாத்து கூரையெல்லாம் திடீர் திடீர்னு உடையுதாம், உருளுதாம்… அப்போ இருந்து கோவாலு வீட்ல இருந்து ஏர்போர்ட் வரும்போதே கார்லயே ஹெல்மெட் போட்டுட்டுதான் வருவானாம்… இவ்வளவு பயம் இருக்கறவன் எதுக்கு ஏர்போர்ட்டுக்கு வரணும்…

(ரஜினி இல்லை என்று உணர்கிறார்)

வடிவேலு: மாப்ள… மாப்ள… மாப்பு… வெச்சுட்டான்யா ஆப்பு… என்னைய தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டானே… அய்யய்யோ இங்கேருந்து ஒரு கிலோமீட்டர் வெளியே போகணுமே… நான் என்ன பண்ணுவேன்… கோபாலு இருந்தாலாவது ஹெல்மெட் வாங்கிப் போட்டுக்கலாமே… கோவாலு… கோவா…லு….

(கூரையில் இருந்து விமானம் ஒன்று விழுகிறது… வடிவேலு பயந்து அலறி ஓடுகிறார்)

# கற்பனை: ஷான் #

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (14-Sep-15, 1:39 pm)
பார்வை : 129

மேலே