காதல் விதவை

தொலைந்துப் போன குழந்தைக்கு
தாய்க் குரல் போல

இத்தனை வருடங்கள்
நம் நினைவுகளைக் காலம்
கழுவிக் காய வைத்தும்

பாடம் சொல்லிதரும் போது
மகளின் பேச்சில்
அவன் வகுப்புத் தோழனின் பெயர்
உன் பெயராக இருந்த போது

என்னை மீறிய
என் சிலிர்ப்புகளை
தவற விட்ட
மகளின் பாடப்புத்தகம்
காட்டிக் கொடுத்தது

தடுமாறிய என் செயலை
மகள் கவனித்தாலும்
வாழ்க்கை என்பது
பணத்தின் கோட்டை அல்ல
அது வெறும் வாசற்படிதான்
என்று என் வாழ்க்கை
பாடத்தில் தோற்றுபோனதை
எப்படிப் புரிய வைக்க முடியும் ?

காதல் என்பது
அன்பு மட்டுமே
என்பதைக் காலம் புரிய வைக்கும் போது
வாலிபம் என்பது
மேற்குச் சூரியனாய்
கரைந்துப் போகிறதே
என்ன செய்ய ?

வாழ்க்கையைக் காதலித்தாலும்
என்னைக் காதலித்த
காதலை மறுத்த
நானும் ஒரு காதல் விதவைதான்

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (14-Sep-15, 6:39 pm)
சேர்த்தது : krishnamoorthys
Tanglish : kaadhal vithavai
பார்வை : 817

மேலே