காதல் விஞ்ஞானி

அடி கோணல் வகிடழகி..!
உன்னை நினைத்து நினைத்து
நான் அளவு குறைந்துபோய்
அணுவாய் ஆனாலும்
அதற்குள் எப்போதுமே
இருக்கத்தான் செய்கிறது
உன்
புரோட்டான் சிரிப்புகளும்
எலக்ட்ரான் கோபங்களும்..!

அதை ரசிப்பதால்தானோ
என்னவோ
என் இதயம்
எப்போதும்
நியூட்ரானாய்.
எந்த வித மின்னூட்டமுமின்றி....
அமைதியாய்....!..!

இருந்தாலும்
எப்படி
உன் பார்வைக் காற்றுமூலம்
என் இதயம்
காதல் மின்சாரத்தை
உற்பத்தி செய்கிறதென்பது
தெரியவில்லை..?
ஒரு எளவும் புரியவில்லை.!

ஒரு வேளை
உனது
ஒரு விழி
நேர்மின்சாரத்தையும்
மறுவிழி
எதிர்மின்சாரத்தையும்
தோற்றுவிப்பதாலோ என்னவோ..

இப்படியே
உன்னை நினைத்து நினைத்து
காதலில் ஜெயிக்கிறேனோ
இல்லையோ
படிக்காமலேயே
விஞ்ஞானி ஆகக்கூடிய
வாய்ப்புகள் அதிகமென்று
நண்பர்கள் சிரிக்கிறார்கள்.

அதிகம் படிக்காதவன் என்பதால்
விஞ்ஞானியாக அருகதை இல்லை..!

உன்னை நினைக்கும்
அமைதியான இதயம்
என்னிடம் இருக்கிறது என்பதால்
உன்னைக் காதலிக்க
அருகதை அதிகமாகவே
இருக்கிறது..!

கண்களால்
என்னைக் கைதுசெய்தவளே..
அந்தக் கண்களாலேயே
புன்னகைத் தீர்ப்பை
சொல்லிவிட்டுப் போ...! !

பூமியைப் புரட்டிப் போடும்
கவிதை ஒன்று
எனக்குள்
தயாராகட்டும்.

தோல் பறை தோற்கும்
கிராமிய ஆட்டமொன்று
எனக்குள்
ஆரம்பமாகட்டும்...!...!
(அடி கருப்பு நெறத்தழகி....கோணல் வகிடழகி)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (15-Sep-15, 8:17 am)
Tanglish : kaadhal vignani
பார்வை : 123

மேலே