நித்தமும் வந்து பழகிக் களிப்பர் பரிந்து - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

உயிரின் உயிராய் உளத்திலே உள்ள
மயல்கொண்ட காதலர் மாண்பாய் - வெயிலின்
நிழலென என்னுடன் நித்தமும் வந்து
பழகிக் களிப்பர் பரிந்து! 1
ஒன்றிய காதலும் வென்றே இனிதாக
குன்றதன் மேல்விளக்காய் கூடியே - நின்று
வளமுடன் எந்நாளும் வாழ்வோம் இனிதே
தளர்வின்றி என்றும் மகிழ்ந்து! 2