கவின் சாரலன்
புனை பெயரில்
சரளமாய்
கவியை
மணமான
மாலையாய்
தொடுக்கும்
கவின் சாரலன் (எ)
சங்கரன் அய்யா .....
உம்மை பற்றி
பதிவு செய்ய நான்
பாடறியேன் ....
படிப்பறியேன் ...
பள்ளிக்கூடம் நான் அறியேன் ....
ஆயினும் ..
உம் கவி சுவை
நகைச்சுவை உணர்வு
ஆயும் தன்மை
அறிவாற்றல்
தமிழ் மீதுள்ள பற்று
தன்மையான நட்பு
இலக்கணத்தின் மீதான நேசம் ..
இளமையான
எண்ணங்கள்
சிந்திக்க வைக்கும் சிந்தனைகள்
இரண்டாயிரம் பதிவுகளை
இனிமையாய் படைத்த
நீர் எழுத்து தளத்தின்
தமிழன்பன் ........
வாழ்க வளமுடன் ..
==கிருபா கணேஷ் =====