வெளி விருத்தம் ---அன்னை எனும் தெய்வம்
அன்பும் பண்பும் அள்ளித் தந்தாய் --- நான்வாழ
அன்னை உன்னை அகிலம் போற்றும் --- நான்வாழ
என்னை பெற்ற என்றன் தெய்வம் --- நான்வாழ
மன்றில் நானும் மகவாய் பிறந்தேன் ---நான்வாழ .
உதிரந் தன்னை உணவாய்த் தந்தாய் --- நான்வாழ
உதிரா வண்ணம் உள்ளன் போடு -- நான்வாழ
கதியாய் நீதான் காக்கின் றாயே --- நான்வாழ
எதிலும் நிறைந்தாய் என்றன் உயிராய் --- நான்வாழ .