நெல் மணியின் காதல்
என் மேல் இந்த மண்ணில்
பிறந்த மாந்தார்கள்
அனைவருக்கும் மோகம்
என் மேல் உள்ள காதலில் இல்லை
நான் அவர்களுக்கு
விருந்து ஆவேன் ஆதலால்
என் மேல்
அளவில்லாத காதல் உள்ளவர்கள்
இந்த வானமும் பூமியும்
மட்டும் தான்......
ஆதலால்
நான் அவர்கள் வாழ்நாள்
முழுவதும் வாழ்ந்து
என் காதலின் காதலை
வாழ வைப்பேன் ....