திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்

அறிமுகம் இல்லாத ஒருவன்…!
அறிமுகத்தை தேடிய நான்…!

கல்லூரி செல்லும் போது,
தினமும் பேருந்து நிறுத்தத்தில்
அவன் வருகைக்காக காத்திருந்தேன்.
அவன் பேருந்தில் ஏறும் வரை,
நின்று அவனை ரசித்திருக்கிறேன்.

இவையனைத்தும் காதலாக இல்லை,
அவன் மீதான என் பார்வை
நட்பை மட்டும் வேண்டியது.
அவன் யார் என்று தெரியாமல்,
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்
கணிணி வகுப்பில் சேர்ந்தேன் - அங்கு
எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன்.
மனதில் ஒருவித மகிழ்ச்சி
அதே சமயம் எதிர்பாராத அதிர்ச்சியும் கூட,

அன்றுதான் அவன் பெயர் அறிந்தேன்.
என் பெயர் அவன் அறிந்தான்.
எதிர்பாராத அதிர்ச்சி என்ன தெரியுமா?
அவன் என் வகுப்பு மாணவன்
இரண்டு ஆண்டுகளாக எனக்கு தெரியவில்லை…!

எப்படி அறியாமல் போனாய் - என்று
என்னை நானே நொந்து கொண்டேன்.
அவன் நட்பாக பேச ஆரம்பித்தான்.
அவனோடு பேசிய நிமிடங்கள்
கவலைகள் மறந்து சிரித்தேன்.

பெண்ணுக்கு ஆண் தாயாக முடியுமென்றால்,
அது நட்பில் சாத்தியம்தான்.
தாயாக மாறி பாசம் காட்டினான்.
என்றும் என் நலன் மீது
அக்கறை காட்ட ஆரம்பித்தான்.

அவனுக்கு பிடிக்காத செயல்கள்
எனக்கும் பிடிக்காமல் போனது.
எனக்கு பிடித்த செயல்களை
எனக்கே தெரியாமல் ரசிக்க ஆரம்பித்தான்.
மணி கணக்காய் உரையாட ஆரம்பித்தோம்.

இருவர் மட்டுமே சென்ற பாதையில்,
மூன்றாவதாக காதல் நுழைந்தது.
எங்கள் நட்பை மறந்துவிட்டான் - என்று
அவன் மீது எனக்கு கோபம்
அவன் காதலுக்கு இடையூறின்றி விலக ஆரம்பித்தேன்.

என் விலகலின் அர்த்தம் உணர்ந்தான்.
என் மீது கோபம் கொள்ள ஆரம்பித்தான்.
என்னை விட்டு விலகாதே என்றான்.
உனக்கு பிறகுதான் என் காதலி.
என் உயிர் நீதான் என்றான்.

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.
என் துன்பத்தில் யாரும் என்னுடன் இல்லை.
என் இன்ப துன்பத்தை புரிந்து,
எனக்கு வழிகாட்டியவள் நீ மட்டுமே…!
என் இரண்டாம் தாய் நீ என்றான்.

நொடி பொழுதும் என்னை விலக நினையாதே!
சொல்லில் கூட நமக்குள் பிரிவு வேண்டாம்.
என்றும் என்னில் உன்னை சுமந்திருப்பேன்.
உன் இன்ப துன்பங்களில்
நான் முன் நிற்பேன் என்றான்.

திருமணத்திற்கு பிறகும் என்னை நேசிக்கிறான்.
அவன் மனைவி என் தோழியானாள்.
என் தாயாக, என் தந்தையாக,
என் சகோதரனாக, என் சகோதரியாக,
இன்றும் என்னை அரவணைக்கிறான்

என்றும் மாசில்லாத மனதோடு,
இன்றும் நல்ல நட்போடு நாங்கள்...!

எழுதியவர் : நிமாவாசன் (16-Sep-15, 4:24 pm)
பார்வை : 189

மேலே