என் இனிய நண்பனுக்காக__________________நிஷா

மொட்டவிழும் மலரோடு
மெல்லமாய் பேசிடுமே காற்று....அந்த
மொழி அறிவாயா நீ.....!

மேனியிலே பட்டுச்சிதறும்
மழைத்துளிகள் மெதுவாய் பேசிடும்
புன்னகை மொழி புரியுமா உனக்கு.....!

நான்....
உன்னோடு பேசுகின்ற நிமிடங்களில்
உணர்கின்றேன் அந்த
உன்னதத்தை.....!

புத்தகத்தின் உள்ளே புனிதப்பொருளாய்
மயிலிறகை மறைத்து வளர்ப்போமே
அந்நினைவு மறந்திடுமா உனக்கு.....!

பம்பரம் சுற்றிடும் அழகை
பார்த்து பார்த்து இரசிப்போமே...
பருவ வயது நினைவுகள் மறக்குமா நமக்கு...!

இப்படியே வளர்ந்து வந்த நம் நட்பில்
இந்த திருமணம் மட்டும் எப்படி
இடைவெளியை தந்திட இயலும்....?

காதலும் காமமும் கலந்ததுதான்
கல்யாணவாழ்க்கை....
கவிதையின் மெல்லிய ஓசையே நம் நட்பு வாழ்க்கை....!

அன்பான உறவைத் தேடிடும்
உன்உள்ளம்....
அழகான பாசத்தோடு
என் உள்ளம்.....

என்றென்றும் தொடரட்டும்
நமது
இனிய நட்பு....



நிஷா.....

எழுதியவர் : நிஷா (16-Sep-15, 7:37 pm)
பார்வை : 241

மேலே