அசைப்பது ஆப்பு துடிப்பது உயிர்

அசைப்பது ஆப்பு!
துடிப்பது உயிர்!!

பழையச் சோற்றின் பலவிதபயனும்
பண்பும்  அறிந்த சான்றோர்
தன்தன்மை சாற்ரி தன்பண்பால்
தனித்து நிற்கும் தகமையால்
"அமிழ்து "என்று அழகிய
அருந்தமிழ் பெயர் சூட்டினர்.

பழையதை உண்பதால் ஏதும்
பிழை இல்லையென பகுத்தறிந்தே
பண்டைகாலத்தில் இருந்தே
உண்டு வந்னர் நம் முன்னோர்
உடல் உரம் பெற்றிருந்தனர்.
இன்னுயிர் போற்றி பாதுகாத்தனர்.

நடுவே எழுந்த  பொல்லாத
நாகரிகத்தால் புதுமை என்று
நாடு கடந்து வந்துள்ள
நலம்தராத நாட்பட்ட உணவு
வகைகளை நாளும் விரும்பி
இக்கால இளைஞர்கள் விரைந்து
நித்தம் உண்ணத் தலைப்பட்டு
மொத்தமாய் சுகத்தை இழக்கின்றார்.

தாம் அசைப்பது ஆப்பு
என்றே விஷயம் அறியாது
நரம்புகள் நலிவுறும்  மதுவுடன்
நாளும் உடலில் விஷத்தை கூட்டும்
பாஸதா பர்கர் பீட்சா புரோட்டா
பேக்கு கோக்கு கேக்குடன்
ஊன்உணவையும் உண்டு களித்து
உயிர் தியாகம் செய்கின்றார்.

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (16-Sep-15, 6:07 pm)
பார்வை : 45

மேலே