பழையச்சோறு புதிய விற்பனை
பழையச்சோறு!
புதிய விற்பனை!!
மேனாட்டில் பழையச்சோறு மகத்துவம் மெத்தவும் ஆராய்ந்து அறிந்து ஆவலுடன் உண்டு மகிழந்து
ஆருயிர் காக்க தலைப்பட்டுள்ளார்
ஆவலின் பயனை வியாபாரம்
ஆக்குவதே பன்னாட்டு உணவு அகங்களின் வழக்கம். அதன்படியே
உடுகுறி உணவகங்கள் தங்கள்
பழையச்சோறு தயாரிப்பில்
உண்ணும் ஆவலைக் கூட்டும்
உயிர்க் கொல்லி ரசாயனங்களை
பக்குவமாய் சேர்க்கும் உக்த்தியுடன்
எப்போதும் போல இப்போதும்
வியாபாரரீதியில் அவரவர் வழியில்
விற்பனைக்குக் கொண்டுவந்தார்.
நா விரும்பும் அருசுவையும்
நாளும் நன்றே உடல் நலம்
கூட்டும் நல் ஊட்டசத்தும்
வீட்டு உணவில் எளிதாய்
அடைந்திட வழி இருந்தும்
அன்புடன் அன்னையும்
ஆசையுடன் நல் இல்லாளும்
அகமகிழ்ந்துஅளிக்கும்
அமிழ்தை ஏற்க இசையாது
நவீன மோகத்தில் மூழ்கி
நலிந்துள்ள புதிய தலைமுறை
எப்போதும் போல இப்போதும்
உடுகுறி உணவகங்களில் நவீன
உணவுப்பெயரில் பழையச்சோறு
சாப்பிட இருக்கை ஒதுக்கீடுக்கு
சாட்டிலைட்வழி முன்பதிவுகோரி
போட்டியிடத் துவங்கி விட்டனர்.
புதைமணலில் புதைவது தெரிந்தும்
பொன்னுயிர் காக்கத் துணிந்திலரே!