அபத்தம்

இரவின் பிடியில்
தனியே சிக்கிவிட்ட
காரிகையிடம்
வன் புணர்வையும்....
காவிக்கண்டைத் தந்து
யாதொன்றுமறியா
பால்மழலையின்
உறுப்பையும்
சிதைக்குமிந்த
சமூகம்தான்......
தெருவில் புணரும்
இரண்டு நாய்களை
விரட்டியடிக்கிறது.

எழுதியவர் : தர்மராஜ் (16-Sep-15, 6:56 pm)
பார்வை : 143

மேலே