பசி

பசி
"""""'

தூரத்தில் ஒரு
அழுக்குச்சேலைக்காரி
அருகில் சென்றால்
அவளது கையில் ஒருவயது
கைக்குழந்தை....

மயங்கியும்...
மயங்காத நிலையில்...!

அவளின்
வாயில் வார்த்தைகள் இல்லை...
கை மட்டும்,
வேலை செய்கிறது...
மற்றவரிடம் நீட்டி...

அதிலொன்றும்,
ஆச்சர்யமில்லை....

அவள் நிற்பதோ ஒரு...
கையேந்திபவன் அருகில்...
கடையிலோ ஒரே கூட்டம்...!!

அவள் கைநீட்டி காசு...
கேட்குமிடத்தில், மற்றவர்...
காசு கொடுத்து, கையேந்தி...
பவனில் சாப்பிடுவதால்,
கடை உரிமையாளர்க்கு சிறு,
மனஸ்தாபம்...!

இவளால், வாடிக்கையாளர்களுக்கு,
தர்மசங்கடம்...!!

இவளுக்கோ,
சங்கடமேயில்லை...!!!

எப்பொழுதும் அங்கு,
நடக்கும் ஒன்றுதான்...

அவள் அந்த கூட்டத்தினுள்
செல்ல... செல்ல....
அண்ணே கொஞ்சம் சாம்பார்...
அண்ணே இங்க ரசம்...
என்று...
சற்றுமுன் சலசலத்த கூட்டம்,
ஒரே மயான அமைதி...

இதற்கு இடையே
கரக்... முரக்...
என்ற
மெல்லிய சத்தம்...!

ஏம்மா உன் பிள்ளைய
தூக்கிட்டு வெளிய போமா...!!
கடை முதலாளியின் குரல்...!!!

வாடிக்கையாளரின் தட்டில்...
உள்ள...
அப்பளம்,
நாலு பல்லு மட்டுமே...
உள்ள...
குழந்தையின் வாயில்...!!!

பசி...
கைக்குழந்தையையும் திருட...
வைக்கும்...
இதுதான் திருட்டென்று,
அறியாத வயதில்....!!!

பிச்சை...
இல்லா இந்தியா எப்பொழுது...
உருவாகும்...???


இவண்
✒க.முரளி (spark MRL K)

.

எழுதியவர் : க.முரளி (17-Sep-15, 10:23 am)
Tanglish : pasi
பார்வை : 330

மேலே