மௌனம் எழுப்புகின்ற நீரொலி

மௌனம் எழுப்புகின்ற நீரொலி



மறந்து விடு
என்ற போது
இன்னும் உயிர்த்தது
என் காதல்

மழை நேரம்
முகம்
தலை மறைத்து
குடையுடன் வந்தாய் நீ
காற்று
பறித்துச் சென்றது
குடை
உன் முகம் பார்த்த
திருப்தியோடு

உன் கவிதை
ரசித்தேன்
அதில்
நான்
இல்லையென்று
தெரிந்தும்

ஒரு பறவை கால்களில்
என்
காதல் வைத்து
அனுப்பினேன்
திரும்பிவந்தது பறவை
கால்களின்றி

கேட்காமல் தந்தாய்
கண்ணீர்
கேட்டும்
நீ தராதது
காதல்

உன்னை
நினைக்கும் போது
தொடர்ந்து எழுதுகிறது
மை தீர்ந்த
பேனா

சொல்
எந்தக் கொல்லனிடம்
நான்
செல்ல வேண்டும்
உன் இதயம்
திறக்கக் கூடிய
சாவி பெறுவதற்கு

நீ
வேண்டுமென்று
அடம்பிடிக்கிறது
என் காதல்
தாயிடம்
மிட்டாய் வாங்கிக்கேட்டு
அழுகின்ற
சிறுவன்போல் .

எழுதியவர் : ராஜகவி ராகில் (17-Sep-15, 1:51 pm)
பார்வை : 164

மேலே