உரையாடல்
பேசும் முகத்தை கவனிக்கும் நாம்
பேசாத வார்த்தைகளை உணர தவறுகிறோம்
பேச்சு முடிந்து செயல்பாட்டின் பொழுது
ஏமாற்றுகிறார் என்று சச்சரவு வளர்க்கிறோம்
பேசும் பொழுது கேட்கும் வார்த்தைகள் தவிர
பேசாத வார்த்தைகளுக்கும் ஒலி உண்டாம்
கருத்து பரிமாற்றம் என்று வரும் பொழுது
இரண்டுக்குமே சரி பாதி இடமுண்டாம்