ஐ லவ் FACEBOOK

பத்தாவது மாடியி இருந்து குதித்து விடப் போவதாக ஒரு இளைஞன் சொல்லிக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் முதியவர் ஒருவர் அவனை கீழே இருந்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.

உன் மனைவியை நினைத்துப் பார்.

அவளை நினைத்து பிரயோஜனமில்லை.

குழந்தைகள்.....?

யாரும் இல்லை.

குதிக்கத் தயாரானான்.

இரு....உன் நண்பர்களையாவது நினைத்துப் பார்.

எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. பழகியவர்கள் எல்லாம் துரோகிகள்.

அப்படியானால் உன் சொந்த வாழ்வை நினைத்துப் பார்.

சொந்த வாழ்வா?

ஆம். உன் சொந்த வாழ்வில் நீ செய்யக் கூடியவைகளை எல்லாம் நினைத்துப் பார்.

அப்படின்னா?

உணவு, சினிமா, புத்தகங்கள்.....?

எனக்கு எதுவும் பிடிக்காது.

அப்படியானால் ஃபேஸ்புக்கிலாவது சேர்ந்து எதையாவது பகிர்ந்து கொள். உன்னைப் போல் இளைஞர்களால் உன் முடிவே மாறி ஒரு வேளை உனக்கு வாழப் பிடிக்கலாம். இல்லன்னா எனக்கு ஒரு friend request குடு. நிறைய பேசலாம்.

முடியவே முடியாது. நான் facebook என்ற பேரேயே நான் அறவே வெறுக்கிறேன்.

அப்டின்னா குதிச்சுத் தொலைடா..... மூதேவி.

என்ற முதியவர் அங்க்கிருந்து நகர்ந்து கொண்டே தன் செல்லில் ஃபேஸ் புக்கில் இதைப் பற்றி ஒரு ஸ்டேடஸ் போட ஆரம்பித்து விட்டார்.

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (17-Sep-15, 9:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 131
மேலே