தினம் தினம் -3-ரகு
தினங்களில் "விசேசம்"
இந்த ஞாயிறு மட்டும்
ஓய்வின்
வேடந்தாங்கலில்
உணர்வுப் பறவைகள்
கூடிக் களிக்கும்
குளிர் நாளிது
அதன் அரை தினம்
திரையரங்கினுள்
தொலையாதிருக்க .....
அழையாது வருதல்
அவசியமெனினும்
உறவுகள்
விட்டுச் செல்லாதிருக்க
உட்பூசலை.......
மனைவி குழந்தை
முகம் சுளிக்கா வண்ணம்
தாராளமாகட்டும்
பணமும் கையிருப்பில்....
ஓய்வின் உன்னதம்
உடல் அறிக....
பரபரத்துக்
கடந்திருக்கும்
பிற கிழமைகள் -ஆனால்
வாழ்விய நதிபாதை
நாணல்கள்
இந்த ஞாயிறுகள்......!!!