இன்று நான் உயிரோடு உள்ளது ஏன் ஏன் ஏன்

இன்று என்னால் பிறருக்கு தர முடிந்த சந்தோஷம்?
இன்று என்னால் பிறருக்கு செய்ய முடிந்த உதவி ?
இன்று என்னால் பிறருக்கு காட்ட முடிந்த அன்பு?
இன்று என்னால் பிறர் கற்றுக் கொண்ட நல்ல செயல் ?
இன்று நான் பிறருடன் செலவழித்த நேரம் ? (பயனுள்ளதா/ பயனற்றதா )
இன்று நான் பிறருடன் பேசியது ?(அன்புடன், கோபமுடன்,பொறாமையுடன் )
இன்று என்னால் பிறர் செய்த தவறு ?
இன்று என்னால் பிறர் கற்றுக் கொண்ட அனுபவம் ?
இன்று என்னால் பிறருக்கு கிடைத்த லாபம் ?
இன்று என்னால் பிறருக்கு ஏற்பட்ட நஷ்டம் ?
இன்று என்னால் பிறர் திருத்திக் கொண்ட தவறு ?
இன்று எனக்கு நானே தந்த தண்டனை ?
இன்று எனக்கு நானே சொன்ன அறிவுரை ?
இன்று ஓர் நாள் கடவுள்
எனக்கு தந்தது
என்னால் பிறருக்கு !
எனக்கு என்னால் !!
நான் செய்யும் நற்செயல்களே !!!
என் வாழ்வின் உயர்ந்த பயன் .!!!!!!!!!!
ஆம் ,
பிறரால் சேவை செய்யப்பட அல்ல !
பிறருக்கு சேவை செய்கிறவர்களாக !
கடவுள் நம்மை இன்று உயிரோடு வைத்திருக்கிறார் .
சொற்பொழிவாளர் களாக அல்ல ;
சொற்படி செய்கிறவர்களாக
கடவுள் இன்று நம்மை
படைத்திருக்கிறார் !!
அற்ப காரியங்களை அல்ல;
அரிய காரியங்களை
சந்தோஷமுடன் நாம்
பிறருக்கு செய்ய பழகுவோம் !!!!