அய்யோ போலீஸ் வேலையா

அய்யோ போலீஸ் வேலையா?
-------------------------------------------------
டேய் ராமமூர்த்தி இன்னைக்கு காவல் உதவி ஆய்வாளர் ( சப்இன்ஸ்பெக்டர்) பதவிக்கு நீ தேர்வாகிட்டனு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள். எப்ப பயிற்சிலே சேரப் போற?
நா எந் தெறமைய நிருபிக்கத்தான் அந்தத் தேர்வை எழுதினேன். அய்யோ சாமி போலீஸ் வேலையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. நாட்டு நடப்பே எனக்கு அதிர்ச்சியக் குடுக்குது. நான் இளங்கலை வேளாண்மை (பி.எஸ்சி அக்ரிகல்ச்சர்) படிச்சவன். எங்க பெற்றோர்க்கு நா ஒரே பையன். எங்களுக்கு அஞ்சு ஏக்கர் நெலம் இருக்குது. எஸ். ஐ ராமமூர்த்தியா நா இருக்க விரும்புல. நா அக்ரி ராமமூர்த்தியா இருந்து கவுரவமா சுதந்திரமா யாரு கட்டுப்பாட்டுக்கும் அடி பணியாம மானமரியாதையோட விவசாயப் பணியைச் செய்யப்போறேன்.
------------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க .