நாளும் உன்னை
எந்த நாளும்
உன்னைச்
சேர....என்
நாட்களும்
கரைகிறது......
காரணம்
புரியாத
ரணங்களால்
கன்னங்கள்
காண்கிறது
நாளும்
நீர்க் கோலங்கள்.....
எந்தன்
கவலைகள்
துடைத்துப்
போகும்
கரங்கள்
உன்னிடம்.....உன்னிடமே
கேட்கிறேன்
வரங்கள்
தந்திடு......
உன்னை
யாரறிவார்
என்னைத்
தவிர....?
எங்கேயோ பிறந்து
எங்கேயோ
வாழ்ந்தாலும்
இங்கே......
உன்னருகில்
மட்டுமே
வாழத்
துடிக்கும்
உன்னுயிர்
ஜீவனிங்கே.....!
ஆழ்கடல்
அலைகள்
கூட
அடங்கிப்
போகும்.....
அடியே......ஆயுள்
உள்ளவரை
உன்னைத்
தேடியே....என்
ஆயுளும்
கரையுமே......!
அனல் மூட்டும்
அடர்ந்த
காட்டின்
அச்சம் போல.....
அஞ்சுதே
இவன்
மனமும்......!
அடைபட்டுக்
கிடக்கும்
நான்கு
சுவருக்குள்
நாளைய
எதிர்காலம்
உன்னால்
மட்டுமே.....
உதயம்
காணும்......!