முதிர்கன்னி - கற்குவேல் பா

முதிர்கன்னி
``````````````
" இந்த முறையாவது
அவளுக்கு நல்வழி பிறக்கட்டும் " என்ற
ஆவலுடன் அலைபேசி அருகே அம்மா !
" மறுநாள் ஆகப்போகிறதே ,
இந்த முறையும் நடக்காதோ " என்றே
பதட்டத்துடன் சாய்வு நாற்காலியில் அப்பா !
" இனிமேலும் இவளுக்காக
காத்திருக்க முடியாது , இதுவே கடைசி " என்ற
கடுஞ் சொற்களுடன் தந்தையருகே தங்கை !
அலைபேசி அழைத்த நொடியில்
எடுத்துப்பேசிய
தந்தையின் முகம் சொல்லிவிட்டது !
இந்தமுறை அவர்கள் கேட்டது
இரண்டு சக்கர வாகனமோ - இல்லை
நான்கு சக்கர வாகனமோ என்று !
காரும் வீடும் வாங்கி கொடுக்குறதா இருந்தா
பேசிக்கலாம்னு மாப்பிள்ளை வீட்டார்
சொன்னதாக தந்தை சொல்ல !
இதற்கு சென்றமுறை வந்தவனே பரவாஇல்லை
இருசக்கர வாகனத்தோடு நின்று விட்டான் என்று
தாயார் அழுது குமுற !
ஏதும் நடக்காததுபோல் , தங்கைக்கு
வரன் பார்க்கச்சொல்லி நகர்ந்து சென்றால்
முப்பதைத் தாண்டிய அந்த முதிர்கன்னி !
- கற்குவேல் . பா