இலையுதிர்ந்த பின் -கார்த்திகா

அழகிய ரோஜாக்கள்
பரிசாய் விலையுயர்ந்தவை
கண்கள் மின்னிடும்
வைரங்களின் ஜொலிப்பில்
நடந்தால் சிவப்பு கம்பளம்
விரிந்தால் விமானம்
வெளிநாட்டுக் குளிர்காற்று
விலை போகா வெப்பத் தொடுகை
சிம்லா மறந்த
நெரிசலில்
அவசர நாழியின்
அரை மணித் தாமதத்திற்கு
"உனக்கெல்லாம் ........."
ஆசைகள் வசவான
அந்த அரை நொடியில்
சரி பார்க்கப்படுகிறது
எம் தந்தையன்பு!!