பெத்தவள் தெய்வம் தான் எனக்கு - மடந்தை ஜெபக்குமார்

பட்ட மரம்
பட்ட பாடு இருக்கே
பத்து மாசம் சுமந்தவள்
பட்டினி போடுவாள

கட்டியவன் சரியில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை
கருகலைப்புக்கும் மனம்மில்லை
கருவில் வளர்ந்து விட்டதே
கருணையில்ல சிசு ஒன்று !!!

பசிக்கு சாதம் கேக்கவில்லை
சிசுக்கு உயிர் கேக்கிறேன்
வந்ததும் போகிறான் கட்டியவன்
சுமப்பவளுக்கு தானே தெரியும் வேதனை

முதலிரவில் மட்டுமே மனிதனே
மற்ற இரவில் அவன் மிருகமே
பாலாய் போனது வாழ்க்கை
பாவி மகன் கையில் !!!

சவுக்கால் அடித்தால் தாங்கிருப்பேன்
நாவல் கொல்கிறானே
கண்ணீர் மட்டுமே உப்பு சுவை
நாவும் கண்டுக் கொண்டது

மதுவால் மனங்கெட்டு கேக்கிறான்
இரவில் மாணவங்கப் படுத்துகிறான்
காலையில் அவனாய் விழிக்கிறான்
நான் மட்டும் ........................................?

மரண வேதனையில் மகனை ஈன்றேன்
மன்னித்து தானே ஆக வேண்டும்
கட்டிலில் மல்லு கட்டியது அவனோடுதானே
மானங் கெட்ட வாழ்க்கை


பசிக்கு சாதம் கேக்கவில்லை
சிசுக்கு பால் கேக்கிறேன்
வந்ததும் போகிறான் கட்டியவன்
பெத்தவளுக்கு தானே தெரியும் வேதனை !!!!!

பட்ட மரம் போல் பட்டும் விட்டேன்
பங்குனி வெயிலாய் வேந்தும் போய்டேன்
பசியே மறக்க நீர் அருந்தினேன்.
என் குழந்தைக்கு ...............................?

முட்டி பார்க்கிறான் ...........?
தடவி பார்க்கிறான் ......?
கதறுகிறான் .......................?
பாலுக்கு பதில் நீர்(கண்ணீர்) மட்டுமே

மடு மடிந்து தொங்கினாலும்
மடி மேல் தூக்கி போட்டு
மடுவில் வாய் வைத்து
இரத்தத்தை பாலாக கொடுத்து வளர்த்தேன்


செத்து விட தோன்றினாலும்
முந்தானை பிடித்து நடக்கும்
சிசு எங்கே போகும் ?
முடிவும் தெரியவில்லை

அறிவுரை :-
கட்டியவள் உன்னில் பாதி என நினைத்து வாழ்
பெற்றவனை நீயாய் நினை !!!
நரகத்தில் வாழ்ந்தாலும்
அது உனக்கு சொர்க்கம் தான் தோழா
-------------------------------------------------------------------------------------------------
மடந்தை -ஜெபக்குமார்

எழுதியவர் : மடந்தை -ஜெபக்குமார் (22-Sep-15, 1:53 pm)
பார்வை : 194

மேலே