விரோதிகள்
புகை பிடிக்கும் பழக்கம்
சுயநல குழப்பம்
பிறர் நலம் அற்ற புகை
புகைஞர்களி ன் இம்சை
உணர முடியா நிலையில்
மண்டியிடும் புகை ,
புகையில் எழுதும் காவியம்
அவர்கள் உடல் அழியும் ஓவியம்
அடுத்தவர் வாழ பொறுக்காத மக்கள் ,
வீடு மனைவி மக்கள்
சுற்றம் சூழல் எதிலும் இன்பம்
அவர்களுக்கு இல்லை
தன்னையே அழிக்கும் அவர்கள்
பிறரை காக்க , பிறருக்காக
வாழப் பொறுப்பார்களா/
இந்தப் புகையினால் என்ன பயன்
அவர்கள் உடம்பில் உள்ளே புகை
யார் நினைப்பார் இவர்கள் சுகம்/
மனிதன் தன்னை தானே தேடும்,
தன்னை தானே நேசிக்கும் பழக்கம் வேண்டும்,
அதுதான் முதலில் மனித சுகம் ,
அடுத்து அடுத்தவர்கள் பற்றி சிந்தனை
இது இரண்டும் இருந்தால்
புகையோ போதையோ எந்தத் தீய பழக்கமும்
மனிதனை அணுகாது ,
எது இருந்தால் போதும் /மதுவும் புகையும் என்று இருப்பவர்கள்
இவற்றை மட்டுமே தங்கள் உயிராக நினைப்பவர்கள்
உலகில் வாழத் தகுதி அற்றவர்கள்
தாங்களே அழிவைத் தேடி ஓடுகிறார்கள்,
தம்மை நம்பி இருக்கும் குடும்பங்களை
அவர்களின் நிலைமைகளை சற்றும் சிந்திப்பதில்லை
ஏழைக் குடும்பங்கள் உணவுக்காக ஏங்கும் நிலையில்
இருக்கும் போதும்
புகையும் மதுவும் இவர்களை
எப்படி எல்லாம் அலைக்கழிக்கும்
எங்கெல்லாம் பணம் கேட்டு அலைவார்கள்
ஏன் இவை இரண்டும் இன்றி
அவர்கள் வாழ்க்கை இல்லை
என்ற நிலைக்கு தள்ளப் பட்டு விடுவார்கள்
பார்த்திருக்க , கேட்டிருக்க படுத்திருப்பார் வீதியிலே
வெட்கம் சூடு சுரணை கருணை கனிவு
எல்லாவற்றையும் இந்த கொடிய பழக்கங்கள்
மறைத்து விடும் , அழித்து விடும்
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் என்ற அழகிய பாடலில்
கவிஞர் இதை அழகாக வெளிப் படுத்தி உள்ளார்
அன்றும் என்றும் இன்றும்
புகையும் மதுவும் மனித விரோதிகள் தான்
புரிந்து கொள்பவர் சிலராக இருக்கலாம்
அனைவராகவும் இருக்கலாம்
மனித நேயம் வாழ, மக்கள் சிறப்புடன் வாழ
வறுமை ஒழிய , தீமைகள் அகல, உலகம் செழிக்க
வேண்டுகிறேன் , வாழ்த்துகிறேன்.