இறைவா

விடியலே என்னை தேடு
வெற்றி என்னும் மாலை சூடு
தடுமாறி ஓடும் எண்ணம் மாற்று
தஞ்சம் சேர வானம் சேர்த்து
வானவில்லை பரிசாய் தீட்டு
வஞ்சம் இல்லா மனதை ஏற்று
வாழ்கையில் வாழ பல வழிகளை தூற்று
உண்மை உலகின் மானிடனாக்கு
உழைக்கும் கைகள் உள்ளவனாக்கு
நல்லவன் என்று புகழ்ந்திட வேண்டாம்
கேட்டவன் என்று தூற்றிடவேண்டாம்
அடுத்தவன் என்று ஒதுக்கிட வேண்டாம்
உற்றவன் என்று உயர்த்திட வேண்டாம்
நல்ல மானிடனாய் வாழ்ந்திட எனக்கு
உன் ஆசி ஒன்றே போதும் என்றும் வேண்டும் .....................