காதல் போர்க்களம்

நெடுக நீளும்
எனது பல மணி நேர வழிப் பயணம்...
ஒரு நாள் காலையில் .........

சாலையின் இரு மருங்கிலும்
விழிகள் காணும் காட்சிகள்...

இரவு முழுவதும் பனியில் நனைந்து
காலை நேரத்தில்
கூந்தல் உலர வைக்கும் தென்னை....

தைரியமிருந்தால் ஏறி வா
என சவால் விடும் உயர்ந்த பனை...

வளமான பூமியின்
நீர் ஆதாரத்தை உறிஞ்சி
எமனாக நிற்கும்கருவேல மரம்...

தோகை விரித்து பெருமை
கொண்டாடும் மயிலினங்கள்.....

அன்பைக் குரலில் குழைத்து
கொஞ்சி செல்லும் புள்ளினங்கள்....

பச்சை பட்டுடுத்திய வயல் மகள்....

உழைப்பால் உயர்வோம் என
வயலுக்குள் வியர்வை தெளிக்கும் உழைப்பாளிகள்...

தான் வெயிலில் காயும் போதும்
தாகம் தீர்க்க நிற்கும் இளநீர் வியாபாரி....

தொலைதூரத்திலேயே
மணத்தால் மனம் கவரும்
மல்லிகை மொட்டுக்கள் விற்பனைக்கு...

வளமான எதிர்காலத்தை
கண்ணில் சுமந்து
பாடச் சுமையை முதுகில் சுமந்து
பாடசாலை செல்லும்
எதிர்கால இந்திய தூண்கள்...

எத்தனை எத்தனை காட்சிகள்
குளிர் சாதன வசதியுடன் கூடிய
நான்கு சக்கர வாகனத்தில்
பயணிக்கும் என் முன்னே கண்ணாடி வழியே...

ஆனால் எதுவும்
என் மனதில் பதியாமல்....
எதையும் ரசிக்க முடியாமல்.....

உன்னால்,
உன் நினைவால்
என் மனதில் எழுந்த அவஸ்தைகளால்.....

அது எனக்கு
பயணக் களம் அல்ல
காதல் போர்க்களம்......

எழுதியவர் : சாந்தி ராஜி (22-Sep-15, 11:27 pm)
Tanglish : kaadhal porkkalam
பார்வை : 77

மேலே