வெண்மகளே

தலைமுடிந்து கோலமிட வந்தவளே
உன் முகத்தில் நான் காணவில்லை
எவ்வித அழகுப்பூச்சும் அவ்விடத்தில்!!

நீ இட்ட கோல மதில்வண்ணப் பூச்சு
இருந்தேனும் வண்ணம் இல்லா
உன் வெளிர்முகத்தில்
கண்டுணர்ந்தேன் வெண்ணிலவின்
......................................வெண்முகத்தை !!

நீ இட்ட கோலங்கள் கலைந்தாலும்
உன் முகம் என்றுமே கலையாது
என்னுள்ளேயே கரைந்துள்ளதடி !!

விடியலில் வரும் விடிவெள்ளியினும்
விரைவாக வந்து காத்திருப்பேனடி?
என்விடியலெனும் உன்முகம் கண்டிடவே !!

நீ வரும் வரை காத்திருப்பேன் கிளையில்லா
ஒற்றை மரம் போல் அவ்விடத்தில் !!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (22-Sep-15, 10:39 pm)
சேர்த்தது : தினேஷ்குமார்
பார்வை : 50

மேலே