எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்புக்கள்
---------------------
கனிவான பார்வை
குறும்பு பேச்சு!
இடைஇடையே
முகம் வழியும்
வெட்கம்!
துருதுரு விழிகள்
சொல்ல துடிக்கு
வார்த்தை!
தடுத்து நிறுத்தும்
நாணம்!
உதடு கடிக்கும்
அழகு!
அதில் நசியும்
மனசு!
நுனி நாக்கின்
அசைவில்
என் உயிர் வேகும்
தணலில்!
உன் மனசு அவிழ்ந்த
நேரம்!
என் மௌனம் செய்த
பாவம்!
துணிச்சல் தொலைந்து
போக!
அவள் நினைவு
மட்டும்
வரமாய்!
காலம் கடந்து
போச்சு!
இனிதொரு சந்திப்புக்கு
ஏங்கும் மனசு!!!
லாஷிகா!

எழுதியவர் : லவன் டென்மார்க் (22-Sep-15, 9:57 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : edhirpaarppu
பார்வை : 105

மேலே