தொடரும் தோழமை

நடை பழகிய நாள் முதல் என்னுடன் வளர்ந்த என் தோழனே ..
இன்று உன் குழந்தையின் நடையை நான் ரசிக்கிறேன் உன் மனைவியுடன் ...
நம் நட்புலகில் பிரிதொருவருக்கும் இடமின்றி நாம் மட்டுமே பயணித்தோம்
நித்தம் நித்தம் வண்ண வண்ண கனவுகளுடன்
சிறகு விரித்து பறந்தோம்...
காண்போர் கண்களிலெல்லாம் வினா?
அறிந்தோர் கண்களிலெல்லாம் கேலி
அறியாதோர் பார்வையில் நட்பா?
அறிந்தோர் பார்வையில் நம் துணை வருவோர் ஏற்பரோ? என்று ......
சிற்சில கால மாற்றங்களில் உன் மனைவியின் வரவில்
நம் உலகம் மாறிவிடுமோ? என தயங்கிய நேரம்
யாரும் நுழையா நம் இருவரின் நட்புலகில்
சத்தமின்றி அவளும் நுழைந்தால்.....
நம் நட்பின் அருமை அவள் அறிய..... பின் வினாபார்வைகளும்
கேலிபார்வைகளும் மௌனமாய் மறைந்தன ...
என் பிள்ளை உன் பெயர் அறிய உன் பிள்ளை என் பெயர் அறிய
அவர்களின் நட்புலகம் விரியும் நேரம் தொடங்கியது ....
என் தந்தை தமையன் கணவன் என்ற உலகில்
என் நண்பன் என்ற உறவும்
என் மகள் அறிந்தால்............

எழுதியவர் : சத்யாதுரை (22-Sep-15, 9:36 pm)
பார்வை : 161

மேலே