ஏழாவது மனிதன் 4 - அவன் அப்படித்தான் - கட்டாரி
![](https://eluthu.com/images/loading.gif)
நகராட்சிக் கழிப்பறைக்குள்
பூனைப்பதிய திருப்பாதங்களோடு
சுழித்துக் கொண்டே
நகர்ந்து விடும் பொழுதிலும்....
நெடிச்செறிவில் நாசிபொத்தி
பகரமாய்.. இடவலமென்று பாராமல்
காறி உமிழ்ந்து
செருமிக் கொண்ட பொழுதிலும்..
அறுந்துவிட்டிருந்த செருப்பை
உதறிவீசியபடியே..
தைக்கச்சொல்லி
ஏவியிருந்த பொழுதிலும்....
உறைகளற்ற
வெறுங் கைகளோடுதான்
சுரண்டியும் ...வழித்தும்..
துடைத்துவிட்டுக் கொண்டுமிருந்தோம் .....
அப்பொழுதுகளில் சத்தமாகவே
அதட்டிவிட்டும்
கடந்திருந்தீர்கள்.....
வங்கிக் காசாளனாக
எம்பிள்ளையொருவன்....
வரிசையில் வரச்சொல்லிக் கேட்க....
அவம் புத்தி அப்படித்தானென
நமுட்டியும் விட்டு ....
வரிசையில் சேர்ந்து கொள்ளும்
நீங்கள்....
சத்தமாகவே சொல்லிவிடுங்கள்....
தலித்தென்றால்... எப்படித்தான்....??!!