இளைய வர்க்கம்
தூங்கியெழுந்து துவங்கிய பயணம்,
துரிதங்களுடனே தடம்பதிக்கிறது,
வழிகளின் விரைவுதனில்,
துருவங்கலாக்கப்படுகிறது இலக்குகள்,
சலிப்பதில்லை பாதங்கள்,
சளைப்பதில்லை தயார்நிலை தோள்பட்டை,
எங்கள் முயற்சிகளின் முட்டி உடைவதும்,
முன்னேறும் முனைப்பில் முதுகில் குத்தப்படுதலும்,
சொல்லி விளக்கி பரிதாபம் தேடிட,
நேரமிருப்பதில்லை எங்களுக்கு,
தடுக்கிவிழுந்து நிமிரும்போதும்,
வழுக்கி ஊனி எழும்போதும்,
வலிப்பதில்லை எந்தவகையிலும்,
புடம்போடப்பட்டவர்கள் அல்ல,
மேனிதனில் தடம்போடப்படுபவர்கள்,
பொருள் ஈட்டுதல் அல்ல எங்கள் நோக்கம்,
வழிகாட்டுதல் மட்டுமே வாழ்கின்ற முறைதனில்,
அவமானம் எங்களது அன்றாட வழக்கம்,
தோல்விகள் எமது வாழ்கையின் புழக்கம்,
வெற்றிமட்டிலுமே வாழ்க்கையன்று,
அது தட்டி எழுப்பாது தொடர் நித்திரையில்,
சேர்த்துவைத்த சொத்தெல்லாம் வேண்டாமே,
சேர்க்கவேண்டும் எண்ணங்களின் வலிமையையும்,
அதன் திண்ணங்களையும் அடுத்ததாய் வருவோர்க்கு,
விரும்பிய மாற்றங்களை கொணர,
விரும்பாத கோடி பேர்களுடந்தான் எங்கள் பயணம்,
எது நடக்காது போனாலும்,
ஒருநாளும் உறங்காது இளைங்கமுயற்சிகள்,
மாற்றங்கள் வந்தாகவேண்டும் மனிதம் தழைய,
எனில் சீற்றம்கொண்ட எங்களை தொடரட்டும் மாமனிதம்...........