பைக் மோகன்
மோகன் அவசரஅவசரமாக வேலைக்கு பைக்கில் போயிக்கொண்டு இருந்தான்,
அப்போது,
அவனுக்கு முன்னால் சென்ற பைக்கில் சைடு ஸ்டாண்டு கீழே இறங்கி இருந்தது,
அதை பார்த்த மோகன்,
அவசரமாக செல்வதால் அதை பற்றி கவலைபடாமல் அந்த பைக்கை முந்திக்கொண்டு சென்றான்,
சிறிது நேரத்தில்,
அதே பைக் மோகனை முந்தி சென்று மோகனிடம் பைக்கை நிறுத்துமாறு சைகை செய்தார்,
மோகனும் தன் பைக்கை நிறுத்தினான்,
அந்த பைக்காரன் மோகனிடம் உங்க வண்டி சைடு ஸ்டாண்டுகீழ இருக்கு மேலே ஏத்தி விடுங்க என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்,
மோகன் தன் வண்டி ஸ்டாண்டு சரி செய்துவிட்டு வேகமாக பைக்கை எடுத்து அந்த பைக்கை முந்தி
சார்
உங்க சைடு ஸ்டாண்டும் கீழ இறங்கி இருக்கு என்று சொன்னான்
அதற்கு அவர் நன்றி சொன்னார்,
மோகனும் அவருக்கு நன்றி சொன்னான்,,
பின்னர் இருவரும் புறப்பட்டனா்,.
க(வி)தை 1
எப்போதும் அடுத்தவர் நலம் மீது நமக்கு ஏதற்கு அக்கறை என இருக்ககூடாது ,
எல்லோர் இடமும் எல்லோரும் அக்கறையுடன் இருக்க வேண்டும்,
அடுத்தவரிடம் அன்புக்காட்டுவது கடவுள் நமக்கு கொடுத்த வரம் அல்ல,
கடவுளாக நாம் மாற கிடைத்த வாய்ப்பு,
தவர விடாதீர்,
தவறு செய்யாதீர்