velaan
வைக்கோல் பஞ்சுமெத்தையாக ஓலப்பாய் விரிப்பபாக மாடுகளின் மணிசத்தம் தாலாட்டாக...
வைக்கோல் பஞ்சுமெத்தையாக
ஓலப்பாய் விரிப்பபாக
மாடுகளின் மணிசத்தம் தாலாட்டாக
அரைஉறக்கமாய் உறங்கி
கருக்கலில் எந்திரிச்சு
கடசல் கூனையுடன் வண்டி கட்டி
அரைவயிறு கஞ்சியுடன்
பொழுதோட முட்டி வலிக்க நீர் இறைச்சு
பொழுதுசாய வீடு வந்த விவசாயிக்கு-
அன்று
விதச்ச வித முளைச்சது- வெள்ளாமை
விளங்குச்சு -உளக்கும் மிஞ்சுச்சு
ஒலையும் கொதிச்சுச்சு....
தகரக்கட்டிலல பஞ்சுமெத்தை போட்டுக்கிட்டு
தகதகவென மின்விசிறி ஒடவிட்டு
காதில ரெண்ட மாட்டிக்கிட்டு
கையில தாளம் சொடுக்கிக்கிட்டு
எப்படியோ தூங்கிபோட்டு
எப்போதாவது எந்திரிச்சு
தடதடவென வண்டி ஓட்டி
பக்கத்து வயல தான் வயலுனு-நெனச்சுக்கிட்டு
மொட்டை வரப்புல மெத்தன்ற மிதியடில
மெல்லென நிண்ணுபோட்டு
ஒற்றை காலைக்கூட ஒரக்கழனியில
ஒருதடவை வைக்காம வந்துபோறார்
-ராசா கையில ரெண்டு போனு
பொத்தான்பல இருககு ஒன்ன
அமுத்தினா கிணத்தில மோட்டார் ஓடும்
இன்ணொன்ன அமுத்தினா விளக்கணைக்கும் -அப்படியே வந்திடுவார்
எதேதோ சொல்லிடுவார் ஏர்உழவனுக்கு
மிச்சம்மீதீ வெள்ளாமை இவங்க பிடிப்பில
இன்று
முழைச்சதுதான் பயிராச்சு -வெளஞ்சதுதான் வெள்ளாமை
எந்தரத்தில வந்ததுதான் மரக்கால்
யாவரிக்கு விற்றதுதான் விலையாச்சு
கையில சேரல ,பையில மிஞ்சல-ஏனோ
தானா விவசாயம்