என்னவள் 7~~அர்ஷத்

"லேடி பேர்ட்"
சைக்கிளில்
பறந்து போகும்
ஒரு "லேடி பேர்ட்"
நீ ...
பட்டப்பகலில்
ஒரு "பியூட்டி" யை
கடத்தி செல்கிறது
ஒரு "ஸ்கூட்டி" !!!
இரவில்
உன்னை
எனக்கு
காட்டியதிலிருந்து
"ஹெட் வெயிட்"
அதிகமாகிவிட்டது
என் வண்டியின்
"ஹெட் லைட்டிற்கு" !!!
"டேக் டைவர்ஷன்"
குறிப்பை பார்காமலேயே
உன் பக்கம் "டைவேர்ட்"
ஆகிவிட்டது என் மனது !!!
நீ
நடந்து
சென்றால்
"நெடுஞ்சாலை" யும்
"பூஞ்சோலை" தான் !!!
உன்னை
பார்க்கவே
பகலிலும்
"ஓவர் டியூட்டி"
செய்கிறது
தெரு விளக்குகள் !!!
நீ
ஆடி ஆடி
செல்வதை
வெறித்து
பார்க்கிறது
அங்கு
நின்று
கொண்டிருந்த
ஒரு "ஆடி"
கார்...!!!
"பல்சர்" காரர்களுக்கு
"பல்ஸ்" அதிகமாகும்
நீ ஸ்கூட்டி ஓட்டும்
அழகிலே ...!!!
உன்னை
பார்த்த பின்பு
என் சாலை வாசகம்
"நில் கவனி செல்" -அல்ல
"நில் தாவணி சொல்"