முதல் காதல்

சந்தன சிம்ஹாசனம் அமைத்து
புத்தம்புது பட்டு சீலையை கிழித்து
வண்ண அத்தபூ கோலங்களின் நடுவில்
தலைவனை அமரவைத்து அழகு பார்க்கணும்
மூன்றடுக்கு மாடி வீட்டின் நடுவில்
தேக்கு கடைசல் வாசலை திறந்து விட
பளிங்கு தரையில் தங்க கொலுசு சிணுங்க
தலைவி உன்னுடன் வாழ்ந்து பார்க்கணும்